செவ்வாய் கிரகத்தில் தோன்றிய பிரகாச ஒளி:
செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான மர்ம வெளிச்சம் தோன்றியுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆய்வு மையமான அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை அறிவதற்கு கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இவ்விண்கலம் கடந்தாண்டு அகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி ஆய்வு நடத்தியத்தில், கடந்த 6ம் திகதி புகைப்படம் ஒன்றை அனுப்பியது.
இந்த புகைப்படத்தில் நம்பமுடியாத அளவில் ஒரு பிரகாசமான ஒளி ஒன்று உள்ளதை கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதில் தெரியும் செயற்கை ஒளியானது தரைபகுதியில் இருந்து மேல் நோக்கி தெரிகின்றது.
ஆனால் இது சூரிய ஒளி போல் இல்லாது, மனிதர்கள் உற்பத்தி செய்யும் ஒளிபோல் இருப்பதால் இவ்விடயம் குறித்து நாசா அமைப்பினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

