Translate

Friday, January 31, 2014

கடந்த வருடத்தின் மிகவும் மோசமான கடவுச்சொல்.


இணையத்தளங்களில் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் மிக உறுதியாக இருக்க வேண்டும் என பல்வேறு நிறுவனங்களும் பல தடைவைகள் அறிவுறித்தியுள்ளன.

எனினும் இன்றும் மில்லியன் கணக்கான பயனர்கள் வலிமை குறைந்த கடவுச்சொற்களையே பாவனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கடந்த வருடம் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்களில் மிகவும் மோசமாக கடவுச்சொல்லாக “123456” காணப்படுகின்றது.

2012ம் ஆண்டின் மோசமான கடவுச்சொல்லாக “password” என்ற சொல் இடம்பிடித்திருந்தது.

இதேவேளை அடோப் நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் 130 மில்லியனுக்கு அதிகமான பயனர்களில் 2 மில்லியன் வரையானவர்கள் “adobe123”, “photoshop” போன்ற கடவுச்சொற்களையே பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை SplashData எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment